search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிடிபட்ட பாம்பு
    X
    பிடிபட்ட பாம்பு

    மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு

    மெட்ரோ ரெயிலில் 5 நாட்களாக பயணம் செய்த பாம்பை, தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடித்த பாம்புபிடி வீரர்கள் வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டனர்.
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க முடியவில்லை. பின், பாம்புபிடி வீரர்கள் 5 நாட்கள் தீவிரமாக செயல்பட்டதன் மூலம், பாம்பை அவர்கள் பிடித்தனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சுக்நகருக்கு அருகில் மெட்ரோ ரெயில் செல்லும்போது அந்த பாம்பை நாங்கள் கண்டுபிடித்து மீட்டோம். அது 2 அடி நீளம் இருந்தது. பின், வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டோம்” என்றார்.

    5 நாட்களாக மெட்ரோ ரெயிலில் கிட்டத்தட்ட 80 முறைக்கும் மேல் அந்த பாம்பு பயணம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×