search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும்- எடியூரப்பா

    புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) இலாகா ஒதுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக, எடியூரப்பா கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றது. 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்கள் முக்கியமான இலாகாக்களை கேட்பதாலும், சிலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் அழுத்தம் கொடுப்பதாலும், உடனடியாக இலாகா ஒதுக்கீடு செய்ய முடியாமல் எடியூரப்பா குழப்பத்தில் உள்ளார்.

    பெங்களூருவில் செல்வாக்கு படைத்த தலைவராக உள்ள ஆர்.அசோக், தனக்கு போக்குவரத்து மற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி துறையையும், சுரேஷ்குமார் நகர வளர்ச்சி துறை, வி.சோமண்ணா வீட்டு வசதி துறையை தவிர வேறு இலாகாவை ஒதுக்குமாறு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், பொதுப்பணி, நிதித்துறையை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான இலாகாக்களை அவர்களுக்கு ஒதுக்கிவிட்டால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எடியூரப்பா ஆலோசிக்கிறார்.

    இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர், “புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் நாளை (அதாவது இன்று) அல்லது நாளை மறுநாளுக்குள்(நாளை) ஒதுக்கீடு செய்யப்படும்“ என்றார்.

    தற்போது புதிய மந்திரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) பெங்களூரு திரும்பு கிறார்கள். 
    Next Story
    ×