search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ. வசுபள்ளி கணேஷ் குமார்
    X
    எம்.எல்.ஏ. வசுபள்ளி கணேஷ் குமார்

    5 ரூபாய்க்கு சாப்பாடு போடும் ஆந்திர எம்.எல்.ஏ.

    தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த தெற்கு விசாகப்பட்டினத்தின் எம்.எல்.ஏ. வசுபள்ளி கணேஷ் குமார் தனது சொந்த செலவில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வருகிறார்.
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேச கட்சி ஆட்சியில் இருந்த போது, மாநிலம் முழுவதும் அண்ணா உணவகம் தொடங்கப்பட்டு ரூ.5-க்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அங்கு உள்ள கிங் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் ஏறத்தாழ வட ஆந்திராவில் இருந்து தினமும் 1,000 பேர் சிகிச்சை பெறுவதற்காக வருவார்கள்.

    இதனால், அங்கும் அண்ணா உணவகம் அரசால் தொடங்கப்பட்டது. குறைந்தது 500-ல் இருந்து 600 நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அண்ணா உணவகத்தில் உணவு அருந்தி வந்தார்கள்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த மாதம் அனைத்து இடங்களிலும் அண்ணா உணவகம் அரசால் மூடப்பட்டது. இது கிங் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் உணவு அருந்தி வந்த நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதனால், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த தெற்கு விசாகப்பட்டினத்தின் எம்.எல்.ஏ. வசுபள்ளி கணேஷ் குமார், தனது சொந்த செலவில் கிங் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் அண்ணா உணவகத்தை தொடங்கினார். அங்கு நோயாளிகளுக்கும், ஏழைகளுக்கும் மீண்டும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×