search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச மந்திரிசபை விஸ்தரிப்பில் பதவி ஏற்ற புதிய மந்திரிகள்
    X
    உத்தரபிரதேச மந்திரிசபை விஸ்தரிப்பில் பதவி ஏற்ற புதிய மந்திரிகள்

    உ.பி. மந்திரிசபை விஸ்தரிப்பு - 23 மந்திரிகள் பதவி ஏற்றனர்

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை விஸ்தரிப்பில் 23 கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
    லக்னோ:.

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. தனது மந்திரிசபையை விஸ்தரிக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்தார். அதற்கு வசதியாக சமீபத்தில் 5 மந்திரிகள் பதவி விலகினர்.

    இந்நிலையில், நேற்று மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெற்றது. 19 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இணை மந்திரிகளான 4 பேர், கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அனைவருக்கும் கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    புதிய மந்திரிகளுக்கு கவர்னரும், முதல்-மந்திரியும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சில மந்திரிகள், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    நேற்று பதவி ஏற்றவர்களில் தலா 6 பேர் கேபினட் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகள் ஆவர். 11 பேர் இணை மந்திரிகள். பல்வேறு சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், உத்தர பிரதேச மந்திரிசபை பலம் 53 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×