search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் ரெயில்வே
    X
    இந்தியன் ரெயில்வே

    அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - இந்தியன் ரெயில்வே

    ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும். மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

    மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து வெளியிட்டுள்ள 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நடைமுறை அக்டோபர் 2-ம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். மேலும், மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×