search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை

    பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி

    பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ‘மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில், ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்’ என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனையடுத்து பாராளுமன்ற செயலகத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சணல், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    Next Story
    ×