search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு

    அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் உடன் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 

    இந்த உரையாடலின் போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மிகவும் பாராட்டத்தக்கது. இது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம்தான் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமுக தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர்

    அவரை தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இது முற்றிலும் இந்திய அரசியலமைப்புக்கு உள்பட்ட உள்நாட்டு விவகாரம் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் எஸ்பருக்கு இந்தியா சார்பில் வாழ்த்துக்களை ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதே போன்று நேற்று தொலைபேசியில் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×