search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு- லக்னோவில் நேரடி ஆட்சேர்ப்பு முகாம்

    இந்திய ராணுவத்தில் சிப்பாய்கள் பிரிவில் பெண்கள் ஆட்சேர்ப்புக்கான முகாம் உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் செப்டம்பர் 12 தேதி தொடங்க உள்ளது.
    லக்னோ:

    இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். கப்பல் படை மற்றும் விமானப் படையில் 13.09 சதவீத பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.  ஆனால் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். 

    இந்த நிலையில் ராணுவ சிப்பாய் வேலையில் பெண்களையும் சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியாகியிருந்தன. அதன்படி பெண் சிப்பாய்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல் முறையாக நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி லக்னோவில் வரும் செப்டம்பர் 12 தேதி முதல் 20-ம் தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 4458 பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கல்வித்தகுதி , உடல் தகுதி ஆகிய விவரங்கள் துறை சார்ந்த இணையதளத்தில் உள்ளது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம், மேலும் ஊக்க மருந்துகள் பயன்படுத்த நேரிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×