search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரக்யா சிங்
    X
    பிரக்யா சிங்

    370, 35ஏ ரத்தினை எதிர்ப்பவர்கள் யாராயினும் நாட்டுப்பற்று அற்றவர்கள் -பிரக்யா சிங்

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என பாஜக எம்.பி பிரியக்யா சிங் கூறியுள்ளார்.
    போபால்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி பெரும் எதிர்ப்பை தெரிவித்தது.

    மத்திய பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்வரும், பாஜக துணைத்தலைவருமான சிவ்ராஜ் சிங் 370 சட்டப்பிரிவை நேரு அமல்படுத்தியது குற்றம் எனவும், காஷ்மீர் மக்கள் ஏழ்மையில்தான் இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார். மேலும், ஷேக் அப்துல்லா குடும்பத்தின்பயங்கரவாதத்தை வளர வழிவகை செய்ததாகவும் கூறினார்.

    ஜம்மு காஷ்மீர்-லடாக்

    இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போபால் பாஜக எம்.பி பிரக்யா சிங், ‘370 மற்றும் 35ஏ என காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு யாரெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களோ, அவர்கள் அனைவருமே நாட்டுப்பற்று மிக்கவர்கள்.

    அவர்கள் நாட்டை நினைத்து பெருமை அடைவார்கள். மோடி, அமித் ஷாவை நினைத்து பெருமைப்படுபவர்கள் நாட்டுப்பற்று உடையவர்கள். இந்த நடவடிக்கையினை எதிர்ப்பவர்கள் மற்றும் 370 சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்தான்’ என கூறினார்.
    Next Story
    ×