search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் பா.ஜ.க. - வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்
    X
    பாகிஸ்தானில் பா.ஜ.க. - வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்

    பாகிஸ்தானில் தாமரை மலர்கிறதா? இதை நம்பலாமா?

    பாகிஸ்தான் நாட்டில் பா.ஜ.க. கட்சியின் கிளை துவங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.



    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ பதிவில் பா.ஜ.க. கட்சி பாகிஸ்தானில் கிளை துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. வீடியோவில் பா.ஜ.க. கொடியுடன் அக்கட்சிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மேலும், பதிவுடன் இது இந்தியா இல்லை பாகிஸ்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வீடியோ 2019 பொது தேர்தலின் போது ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகும். ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் அதுல் குஷ்வாஹா என்பவர் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு, பா.ஜ.க. கட்சியின் கிளை பாகிஸ்தானில் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

    ட்விட்டரில் இதனை பலர் உண்மையென நம்பி பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் பா.ஜ.க.விற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதே வீடியோ பஞ்சாப் கேசரி டி.வி. எனும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    யூடியூபில் இந்த வீடியோவிற்கு, பா.ஜ.க. கட்சி வேட்பாளர் சோஃபி யூசப் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எடுக்கப்பட்டதாக தலைப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது 2019 பொது தேர்தலில் அனந்த்நாக் பகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் சோஃபி யூசப் வேட்பு மனு தாக்கல் செய்த போது எடுக்கப்பட்டதாகும்.

    இதே வீடியோவினை மார்ச் 30, 2019 இல் யூசஃப் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தேர்தலில் இவர் ஹசைன் மசூதியிடம் தோல்வியுற்றார். இதே பதிவு பொது தேர்தலின் போதும் வைரலானது. அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோவும் பொய் என உறுதியாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல்களை ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மையை நன்கு அறிந்த பின் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும். போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
    Next Story
    ×