search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பங்களா
    X
    அரசு பங்களா

    அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு

    ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு அரசு சார்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மக்களவை கலைக்கப்பட்டுவிட்டால் அந்த தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதி.

    16-வது மக்களவையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே மாதம் 25-ந்தேதி கலைத்தார். அதன்படி ஜூன் 25-ந்தாம் தேதிக்குள் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் பங்களாவை காலி செய்திருக்க வேண்டும்.

    ஆனால் மக்களை கலைக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முன்னாள் எம்.பி.க்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெல்லியில் உள்ள அரசு பங்களாக்களை காலி செய்யவில்லை. இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    புதிய எம்.பி.க்களில் 250 பேர் டெல்லி வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் இடங்களிலும், விருந்தினர் மாளிகையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய அரசு கெடு விதித்துள்ளது.

    இதுதொடர்பாக மக்களவை குழு அதன் தலைவர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் நேற்று கூடியது. அந்த கூட்டத்துக்கு பிறகு சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், லுடியன்ஸ் பகுதியில் அரசு பங்களாக்களில் தங்கி இருக்கும் முன்னாள் எம்.பி.க்கள் அங்கிருந்து காலி செய்ய ஒருவாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் கியாஸ் இணைப்புகளை 3 நாட்களுக்குள் துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் குடியிருக்கும் பங்களாக்களில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று இதுவரை எந்த எம்.பி.யும் கூறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×