search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

    தங்கம் அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
    புதுடெல்லி :

    உலக அளவில் இன்று தங்கத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் அதன் விலையும் கடுமையான ஏற்றத்தை கண்டிருக்கிறது. தங்கத்தை வாங்குவதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனென்றால் ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தங்கமே நிர்மாணிக்கிறது.

    தங்கள் நாட்டின் தலைமை வங்கியில் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி) உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்பவே எல்லா நாடுகளும் பணத்தை புழக்கத்தில் விடுகின்றன. இதனால் தங்கத்தை இருப்பு வைத்துக்கொள்வதில் நாடுகளுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது.

    இந்தியா

    உலக அளவில் இன்று தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா ஆகும். உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட உத்தேச மதிப்பு பட்டியலின்படி அமெரிக்கா 8133.5 டன் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி தான் அதிக அளவு தங்கத்தை வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தங்க இருப்பு 3367.8 டன்.

    அந்த நாடுகளை தொடர்ந்து இத்தாலி 2451.8 டன், பிரான்ஸ் 2436.1 டன், ரஷியா 2207 டன், சீனா 1926.5 டன், சுவிட்சர்லாந்து 1040 டன், ஜப்பான் 765.2 டன், இந்தியா 618.2 டன், நெதர்லாந்து 612.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.

    தங்கம் இருப்பு பட்டியலில் இந்தியா இதற்கு முன்பு 10-வது இடத்தில் இருந்தது. தற்போது 9-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×