search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன, ஆனால் மாணவர்கள் இல்லை: ப. சிதம்பரம் ட்வீட்

    ஜம்மு-காஷ்மீரில் பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன, ஆனால் மாணவர்கள் இல்லை என ப.சிதம்பர்ம் ட்வீட் செய்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முந்தைய நாளில் இருந்து முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

    பக்ரீத் பண்டிகை, சுதந்திர தின விழாவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சில இடங்களில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டது.

    அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தன. இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். இதனால் மீண்டும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் ‘‘தற்போதைய ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?  இதுதான் நடக்கிறது’’ என்று பதிவிட்டு கீழுள்ள ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ளார்.

    அதில் ‘‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்தும் சஜக நிலை. பள்ளிக்கூடம் திறந்திருக்கிறது. மாணவர்கள் இல்லை.

    ஜம்மு-காஷ்மீரில் அனைத்தும் சகஜ நிலை. மீண்டும் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது.

    ப.சிதம்பரம்

    ஜம்மு-காஷ்மீரில் அனைத்தும் சகஜ நிலை. மெஹபூபா முப்தி மகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏன் என்று அவர் கேட்டால், பதில் இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×