search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி புகைப்படம்
    X
    மாதிரி புகைப்படம்

    ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் : ஜம்மு காஷ்மீர் வணிகர்கள் கோரிக்கை

    ஜம்மு காஷ்மீரில் ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜம்மு:

    ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி செலுத்துபவர்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30-ம் தேதி கணக்குகளை தாக்கல் செய்யும் நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக வணிகவளாகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், சில பகுதிகளில் இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சி

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டுமென காஷ்மீர் வணிகர்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் நீரஜ் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து பேசிய நீரஜ் ஆனந்த், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி கணக்குகள் தாக்கல் அனைத்தும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதால் தற்போதய நிலையில் வணிகர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. 

    ஆகையால், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தாக்கலுக்கான காலாஅவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் நீட்டிக்கவேண்டும் என தெரிவித்தார். 
    Next Story
    ×