என் மலர்

  செய்திகள்

  அமேசான்
  X
  அமேசான்

  உ.பி.யில் ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி போனை டெலிவரி செய்த அமேசான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமேசான் மூலம் ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி போனை டெலிவரி செய்து அதிர்ச்சி அளித்துள்ளது அமேசான்.
  உத்தர பிரதேசத்தைச்  சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ‘iPhone XR’ மாடல் ஆப்பிள் போன் ஆர்டர் செய்துள்ளார். கடந்த 3-ந்தேதி ஆர்டர் செய்த அவர், தந்தையின் பெயரில் டெலிவரி செய்ய பதிவு செய்துள்ளார்.

  அடுத்த நாள் அமேசான் டெலிவரி பாய் அவரின் தந்தையிடம் ஒரு பாக்ஸை கொடுத்துள்ளார். பாக்ஸை பிரித்தபோது ஐ-போன் நிறுவன கவரை பிரித்தபோது உள்ளே சோனி நிறுவனத்தின் ‘Xperia’ மாடல் போன் இருந்துள்ளது. மேலும் அந்த போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய போனாக இருந்துள்ளது.

  இதுகுறித்து அவர் உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். அவர்களும் 10-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

  ஆனால் ஒருவாரமாகியும் அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்தியாவுக்கான அமேசான் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தினர்.

  போலீசார் தலையிட்டதும் உடனடியாக இந்த பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்துள்ளனர்.
  Next Story
  ×