என் மலர்

  செய்திகள்

  இந்திய ராணுவ வீரர்கள் கோப்பு படம்
  X
  இந்திய ராணுவ வீரர்கள் கோப்பு படம்

  பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
  காஷ்மீர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர் இந்திய படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 

  இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டு ராணுவ நிலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. பாகிஸ்தான் தரப்பில் சில ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 
  Next Story
  ×