search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ. வீட்டில் கைற்றப்பட்ட ஏ.கே.-47 ரக துப்பாக்கி
    X
    எம்.எல்.ஏ. வீட்டில் கைற்றப்பட்ட ஏ.கே.-47 ரக துப்பாக்கி

    எம்.எல்.ஏ. வீட்டில் சிக்கிய ஏகே-47 துப்பாக்கி: உபா சட்டத்தின்கீழ் வழக்கு

    பீகாரில் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் மோகாமா தொகுதி எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங். சுயேட்சை உறுப்பினரான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பாட்னா புறநகர்ப் பகுதியில் உள்ள லட்மா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இவரது கோட்டையாக கருதப்படுகிறது. சோட்டா சர்க்கார் மற்றும் மோகாமா டான் ஆகிய பட்டப் பெயர்களுடன் அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில், லட்மா கிராமத்தில் உள்ள ஆனந்த் குமார் சிங்கின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஏகே-47 ரக துப்பாக்கி, 26 தோட்டாக்கள், மேகசின்கள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. 

    பொதுவாக மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்துதான் இதுபோன்ற ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்படும். தற்போது எம்எல்ஏ வீட்டில் அத்தகைய துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வெடிகுண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன. 

    சோதனை நடந்தபோது எம்எல்ஏ அங்கு இல்லை. வீட்டை பராமரித்து வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (உபா) எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×