search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 7-வது நாளாக விசாரணை

    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது? என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன்பு 7-வது நாளாக நடைபெற்றது.
    புதுடெல்லி:

    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது? என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன்பு 7-வது நாளாக நடைபெற்றது. அப்போது ராம் லல்லா தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் 3-வது நாளாக ஆஜராகி, தொல்லியல் ஆய்வுத் துறையின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி வாதாடினார். 

    சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோவில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் அப்போது அவர் கூறினார். 

    இஸ்லாமிய அமைப்பின் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவான் ஆஜராகி வாதாடினார். பின்னர் வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×