search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரதட்சணை கொடுமை
    X
    வரதட்சணை கொடுமை

    மனைவி இறந்த பிறகும் வரதட்சணை கொடுமை: இறுதிச் சடங்கு செய்ய விடாமல் தடுத்த கணவன்

    ஒடிசாவில் வரதட்சணை கொடுக்காததால் மனைவி இறந்த பிறகு, மூன்று நாட்கள் இறுதிச் சடங்கு செய்ய விடாமல் கணவன் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஒடிசாவில் உள்ள மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமம் குச்செய். இந்த கிராமத்தில் உள்ள ஒரு நபருக்கு திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள வழக்கத்தின்படி திருமணத்தின்போது வரதட்சணையாக இரண்டு மாடுகள், ஒரு ஆடு, மூன்று புடவைகள் வழங்கப்படும்.

    சமீபத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது அவருக்கு வரதட்சணை கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அவரது மனைவி திடீரென இறந்துவிட்டார்.

    வரதட்சணை கொடுமை

    இதனால் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தனக்கு வரதட்சணையாக  இரண்டு மாடுகள், ஒரு ஆடு, மூன்று புடவைகள் வழங்கப்படவில்லை. அதை தந்த பிறகுதான் உடலை இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்.

    உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதனால் உறவினர்கள் இந்த பிரச்சனையை போலீஸ் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன்பின் போலீசார் தலையிட, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

    வரதட்சணை கொடுமை

    மனைவி இறந்த பிறகும் வரதட்சணைக்காக மூன்று நாட்கள் உடலை இறுதிச் சடங்கு செய்ய விடாமல் தடுத்த கணவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×