search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிஷேக் சிங்வி
    X
    அபிஷேக் சிங்வி

    காஷ்மீர் விவகாரத்திற்கான ஐ.நா. கூட்டம் மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான தோல்வி: காங்கிரஸ்

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா. ஆலோசனை நடத்த இருப்பது மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான தோல்வி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், இதுகுறித்து முக்கியமான நாடுகளுக்கு தூதரகம் மூலம் காஷ்மீர் முடிவு குறித்தான விளக்கத்தை தெளிவாக தெரிவித்தது.

    பெரும்பாலான நாடுகள் இது உள்நாட்டு விவகாரம் என ஒதுங்கிக் கொண்டது. இது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு சென்றது. இதுகுறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முறையிட்டது. இதற்கு சீனா ஆதரவு அளித்தனர்.

    இன்று இரவு இதுகுறித்து ஐ.நா. ஆலோசனை நடத்துகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. ஆலோசனைக் கூட்டம் நடத்துவது ராஜாங்க ரீதியிலான தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிங்வி கூறுகையில் ‘‘இது மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான பயங்கரமான தோல்வி. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சீனாவில் இருக்கும்போது இது படுபயங்கரமான தோல்வி.

    பிரதமர் மீண்டும் அமைதியாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் உடனடியாக போன் செய்து நண்பர்களான அனைத்து நாட்டு தலைவர்களிடம் கூட்டத்தை ரத்து செய்ய சொல்ல வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×