search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

    அடுத்த தேர்தலில் 70 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் 51-வது பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க அவரது கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லியில் 67 தொகுதிகளில் நமது கட்சி வெற்றி பெற்றது. இனி அடுத்து வரும் தேர்தலில் 70-க்கு 70 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்றார். இவர் பேசிய வீடியோ ஆம் ஆத்மி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×