search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறி விடும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 133 கோடி மக்கள் உள்ளனர்.

    ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த கடும் முயற்சி காரணமாக அங்கு மக்கள் தொகையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இந்தியாவிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இது, ஓரளவு கை கொடுத்தாலும் முழுமையான பலனை தரவில்லை. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

    கோப்புப்படம்


    இதனால் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறி விடும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    தற்போதைய வளர்ச்சி விகிதங்கள் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும் போது, இவ்வாறு இந்தியா முந்தி விடும் என்று தெரிய வந்துள்ளது.

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் வட மாநிலங்களில் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    தென்மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் வடமாநிலத்தில் 2.3 என்ற அளவில் உள்ளது.

    குறிப்பாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.

    ஆனாலும், இந்தியா தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியின் காரணமாக 2065-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×