search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவசம் - கெஜ்ரிவால் அதிரடி

    டெல்லி மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் அக்டோபர் 29 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே, டெல்லியில் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், அக்டோபர் 29-ம் தேதி முதல் டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ரக்‌ஷா பந்தனான இன்று இத்திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×