search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொங்கன் ரெயில்வே
    X
    கொங்கன் ரெயில்வே

    நிலச்சரிவு காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதா?

    பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் கொங்கன் பகுதியில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல்களின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
    இந்தியாவின் மேற்கு கடலோர மாவட்டத்தை சேர்ந்த கொங்கன் பகுதியில் கடந்த சில மாதங்களில் பலத்த மழை பெய்கிறது. மேலும் மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    இந்நிலையில், கனமழையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வைரலாகி வருகிறது. கொங்கன் பகுதியை சேர்ந்த கர்வார் பகுதியில் நிலச்சரிவு காரணமாக ரெயில்வே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்படுகிறது.

    நிலச்சரிவு காரணமாக ரெயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டிருப்பதால், ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வைரல் பதிவினை ஆய்வு செய்ததில், இது முற்றிலும் போலி என தெரியவந்துள்ளது.

    கொங்கன் ரெயில்வே வைரல் ஃபேஸ்புக் பதிவு

    ரெயில்வே சேவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முயன்றதில், கொங்கன் ரெயில்வே கார்ப், அப்பகுதியில் ரெயில் சேவை இயங்கி வருவதாக தெரிவித்திருக்கிறது. எனினும், கொங்கன் பகுதியில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக கொங்கன் ரெயில்வே தெரிவித்திருக்கிறது.

    அந்த வகையில் கொங்கன் பகுதியில் ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஃபேஸ்புக்கில் வைரலாகும் தகவல் முற்றிலும் பொய் என உறுதியாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள், வீண் பதற்றமும் ஏற்படுகிறது. சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
    Next Story
    ×