என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி - பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியாகினர். மேலும், பலர் காயம் அடைந்தனர்.

  இந்நிலையில், உத்தரகாண்ட்டில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் வேன் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  Next Story
  ×