search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    காஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் - கவர்னருக்கு ராகுல் சவால்

    எதிர்க்கட்சி தலைவர்களும் நானும் காஷ்மீருக்கு வருகிறோம். அங்கு நாங்கள் சுதந்திரமாக மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என காஷ்மீர் கவர்னருக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த10-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ’காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் ’ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன்.

    காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்

    ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள்.  இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கவர்னரின் அழைப்பை ஏற்று காஷ்மீருக்கு வர தயாராக இருப்பதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ’நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் (கவர்னர்) அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம்.

    இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்’ என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×