என் மலர்

  செய்திகள்

  மழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா
  X
  மழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

  கர்நாடகாவில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த எடியூரப்பா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் மழையால் பாதிக்கப்பட்ட சிவமொக்கா மாவட்டத்தில் முதலமைச்சர் எடியூரப்பா இன்று ஆய்வு செய்தார்.
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. 

  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கி விடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிகிறார். 

  மழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிடும் எடியூரப்பா

  இன்று சிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப்  பொருட்களை உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  தீர்த்தஹள்ளி தாலுகா ஹெகலாட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்துபோனதையும் அவர் பார்வையிட்டார். 

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மகாராஷ்டிர மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. விளைநிலங்கள் மூழ்கியதால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கிவிட்டன. 

  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், வீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடு கட்டிக்கொள்ள 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
  Next Story
  ×