என் மலர்

  செய்திகள்

  காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சி
  X
  காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சி

  ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடைபெறவில்லை: போலீஸ் அதிகாரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை மிகவும் அமைதியாக கொண்டாடப் பட்டதாகவும், ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
  காஷ்மீர்:

  ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பல இடங்களில் கட்டுப்பாடு மாலை வரை தளர்த்தப்பட்டது.

  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று பக்ரீத் பண்டிகை மிகவும் அமைதியாக நடைபெற்றதாக தலைமை போலீஸ் அதிகாரி பானி தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:-

  ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டு பக்ரீத் பண்டிகை மிகவும் சிறப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடப்பட்டது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஒரு சில பகுதிகளில் சிறிய அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. அதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் நேர்த்தியாக கையாண்டனர். இதனால், இன்று எந்த பகுதியிலும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை.

  ஜம்மு காஷ்மீர் தலைமை போலீஸ் அதிகாரி பானி
  மேலும், ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக பாகிஸ்தானை சேர்ந்த ஊடகங்கள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அதை உள்ளூர் மக்கள் யாரும் நம்பவேண்டாம். ஏனெனில் இங்கு மிகவும் அமைதியான சூழ்நிலையே நிலவுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×