என் மலர்

  செய்திகள்

  டோல்கேட் ஊழியர்கள் கைது
  X
  டோல்கேட் ஊழியர்கள் கைது

  15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வற்புறுத்தி டிரைவரை அடித்துக்கொன்ற டோல்கேட் ஊழியர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நொய்டாவில் 14,600 ரூபாய் கட்டணம் செலுத்தக்கூறி லாரி டிரைவரை அடித்துக் கொன்ற 7 டோல்கேட் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
  உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா கோதா காலனியில் வசித்து வந்தவர் விமல் திவாரி. லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் லாரியில் உ.பி.யில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.

  இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கலிண்டி கஞ்ச் டோல்கேட்டில் லாரியை நிறுத்திய டோல்கேட் ஊழியர்கள் 14 ஆயிரத்து 600 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று விமலை மிரட்டியுள்ளனர்.

  ஆனால் விமல் பணம் செலுத்த மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறில் ஊழியர்கள் விமலை அடித்துள்ளனர். பின்னர் அவர் லாரியை நிறுத்தி விட்டு நடந்து சென்றுள்ளார்.

  அதன்பின் அவரை காணவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நொய்டா பகுதியில் காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். விமல் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  விமலை அடித்து ஆற்றங்கரையோரம் வீசியதாக ஏழு டோல்கேட் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
  Next Story
  ×