search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்- பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

    பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை  தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர். 

    ஜம்முவில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகள் மற்றும் பல்வேறு மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். ஈத் முபாரக்” என்று தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×