search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹமீத் திரைப்படம்
    X
    ஹமீத் திரைப்படம்

    தேசிய விருது பெறப்போகும் தகவலை சிறுவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் படக்குழு

    தேசிய விருது என அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சிறுவனுக்கு, அந்த செய்தியை சொல்ல முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.
    புது டெல்லி:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை லடாக், காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையிலும் இது குறித்த விவாதங்கள் ந்ழுந்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

    இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருடனான தொலைத்தொடர்பு செய்திகள் துண்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் பட்டியலில் உருது மொழி படத்துக்கான விருதை ஹமீத் எனும் படம் பெற்றது.

    தல்ஹா அர்ஹத் ரேஷி

    இந்த படத்தில் தல்ஹா அர்ஹத் ரேஷி எனும் காஷ்மீரைச் சேர்ந்த சிறுவன், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தான். இந்த சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை அச்சிறுவனுக்கு தெரியப்படுத்த படக்குழுவினர் தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இது குறித்து அப்படத்தின் இயக்குனர் இஜாஸ் கான் கூறுகையில், ‘சிறுவனையும், அவனது தந்தையையும் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    ஆனால், கூற முடியவில்லை. இது மிகுந்த மனவேதனையாக உள்ளது. இன்னும் சிறப்பான முயற்சிகள் எடுத்து அந்த சிறுவனிடம் தகவலை கொண்டு சேர்போம்’ என கூறியுள்ளார். 
    Next Story
    ×