search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டைக்கான ஓட்டல் பில்
    X
    முட்டைக்கான ஓட்டல் பில்

    ஒரு அவித்த முட்டை: ரூ.850 -வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த பில்

    மும்பையில் உள்ள ஓட்டலில் 2 அவித்த முட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டவருக்கு, பில்லில் ரூ.1700 வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மும்பையில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர், 2 அவித்த முட்டைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அந்த அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 பில் வந்துள்ளது. மேலும் ஆம்பிளேட்டுக்கும் இதே விலை வந்துள்ளது.

    இந்த பில்லை, கார்த்திக் தர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘இந்த கோழி மிகவும் பணக்கார கோழியாக இருக்கும் போல’ என கிண்டலாக எழுதியிருந்தார். இதனை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்து, தங்கள் கருத்துக்களை கமெண்டுகளில் கூறி வருகின்றனர்.

    ராகுல் போஸ் ஆர்டர் செய்த வாழைப்பழத்தின் பில்

    சமீபத்தில், இந்தியில் பிரபல நடிகராக விளங்கும் ராகுல் போஸ் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அந்த வாழைப்பழத்துடன் வந்த பில்லில், இரண்டு பழங்களுக்கான விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி வரி ரூ.67.50 எனவும் ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராகுல், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து விவரமாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
    Next Story
    ×