search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ஜமா மசூதியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை
    X
    டெல்லி ஜமா மசூதியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை

    நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்- மசூதிகளில் சிறப்பு தொழுகை

    நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். 

    மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

    டெல்லி காஷ்மீர் கேட்டில் உள்ள பஞ்சா ஷரிப் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டு, நமாஸ் செய்தார். 

    தியாகத் திருநாளான இன்று இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். 
    Next Story
    ×