search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த மலப்புரம் மாவட்டம்
    X
    வெள்ளம் சூழ்ந்த மலப்புரம் மாவட்டம்

    கேரளா கனமழை - நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு

    கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கினர். மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

    மலப்புரம் கவளப்பாறை பகுதியில் நிலச்சரிவால் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் மூன்றாவது நாளாக மாயமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.  

    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    Next Story
    ×