search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள்
    X
    இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள்

    பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்யுங்கள்: மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை

    இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள்,தயாரிப்பாளார்கள் அனைவரையும் உடனடியாக தடை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    மும்பை:

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வததாக அறிவித்தது.

    இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக தடை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

    இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இந்திய சினிமா, திரைப்படத்துறையில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளை பிரதமர் மோடி உடனடியாக தடை செய்யவேண்டும். அதுவரை சினிமா மற்றும் திரைப்பட தொழிலாளர்கள்  அனைத்து தங்கள் பணிகளுக்கு திருப்ப மறுக்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×