search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்
    X
    தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்

    தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு தங்கக்கட்டிகள் கடத்திய இருவர் கைது

    தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை இந்திரா காந்தி பன்னாட்டு விமானநிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுடெல்லி: 

    பாங்காங்கிலிருந்து நேற்று டெல்லிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் வழக்கமான  சோதனை செய்தனர். இதில், இருவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரது பதிலும் மழுப்பலாக இருந்ததால் அவர்களது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். 

    அவர்கள் இருவரும் கொண்டு வந்த சூட்கேசுகளில் சிவப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வைத்திருந்த பார்சலில் 9 கிலோ 152 கிராம் எடையுள்ள 12 தங்க கட்டிகளும், மற்றொருவரின் பார்சலில் 265 கிராம் எடையுள்ள 4 தங்கக் கட்டிகளும் இருந்தன. தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து இருவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும், மேலும் இந்த இருவரும் 2018 முதல் தற்போது வரை ரூ.16.80 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தியுள்ளனர் எனவும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள், வரி வசூலிக்க ஏதுவாக கிரீன் சேனல் மற்றும் ரெட் சேனல் என இரு பாதைகளை அமைத்துள்ளனர். அதாவது வரி செலுத்த தேவையில்லாத பொருட்களை கொண்டு வருவோர் கிரீன் சேனல் வழியாக செல்லவெண்டும். வரி செலுத்த வேண்டிய பொருட்கள் உடையவர்கள் ரெட் சேனல் வழியாக வெளியேறவேண்டும். தங்கம் கடத்தி வந்தவர்கள் கிரீன் சேனல் வழியாக வந்தபோது பிடிபட்டுள்ளனர்.
    Next Story
    ×