search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடு
    X
    சந்திரபாபு நாயுடு

    ஜெகன்மோகன் எருமை மாடு: நான் கறவை மாடு- சந்திரபாபு நாயுடு சர்ச்சை பேச்சு

    பால் கறக்கும் கறவை மாடான என்னை புறகணித்துவிட்டு எட்டி உதைக்கும் எருமை மாடான ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டதாக சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.
    நகரி:

    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக சந்திரபாபு நாயுடு குற்றசாட்டி வருகிறார்.

    இந்த நிலையில் குண்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி எப்படி தோற்றது என்றே தெரியவில்லை. வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளோம். அந்த அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்?

    பால் கறக்கும் கறவை மாடான என்னை புறகணித்துவிட்டு எட்டி உதைக்கும் எருமை மாடான ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 2 மாத ஆட்சியில் மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

    ஜெகன்மோகனுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம் என்று எண்ணி வாக்களித்த மக்கள் இப்போது ஏமாந்துவிட்டோம் என்று உணர்ந்து இருக்கிறார்கள்.

    மணல் விலை 10 மடங்கு உயர்ந்து விட்டது. எனது ஆட்சியில் பென்‌ஷன் தொகை 1-ந் தேதி வழங்கப்பட்டு வரும். ஆனால் தற்போது பென்‌ஷன் தொகையை சரியாக கொடுப்பதில்லை.

    நான் ஆட்சியை மீண்டும் பிடிக்கவில்லை என்பதைவிட மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர் என்று எண்ணும் போது வேதனையாக உள்ளது.

    நாம் நன்றாக ஆட்சி செய்துவிட்டோம் என்று நீங்கள் (தொண்டர்கள்) அலட்சியமாக இருந்ததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×