search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த உ.பி. வாலிபர்
    X
    வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த உ.பி. வாலிபர்

    வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த உ.பி. வாலிபர்

    குவைத் நாட்டில் வேலை பார்த்துவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வாட்ஸ் ஆப் செயலி மூலம் மூன்று முறை தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்
    முசாபர்நகர்:

    இந்தியாவில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

    இந்நிலையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஒருவர் மூன்று முறைதலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். குவைத் நாட்டில் வேலை செய்து வரும் இவர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கடந்த மே மாதம் 27 ம் தேதி அவரது மனைவி உத்தர பிரதேச மாநிலத்தின் சிகேதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை வாப்ஸ் பெறுமாறு அவர் தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று வாட்ஸ் ஆப் செயலி மூலம் மூன்று முறை தலாக் கூறிய அந்த நபர், தன் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிகேதா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     


    Next Story
    ×