

சுஷ்மா 2019ம் ஆண்டு தேர்தலில் உடல்நலக் குறைவின் காரணமாக போட்டியிடபோவதில்லை என கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதற்கு அவரது கணவர் சுவராஜ் கவுசல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்ததற்கு நன்றி.
1977ம் ஆண்டு உங்களது இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்தது. அன்று முதல் 11 தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள். 4 முறை மக்களவை உறுப்பினர், 3 முறை மாநிலங்களவை உறுப்பினர். 25 வயதில் உங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தீர்கள்.
46 ஆண்டுகளாக இந்த ஓட்டம் நிற்கவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து ஓடிவிட்டேன். நான் இன்னும் 19 வயதுடைய வாலிபர் இல்லை. எனவே, இப்படி ஒரு முடிவுனை எடுத்ததற்கு மிக்க நன்றி' என பதிவிட்டிருந்தார்.