search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    எம்பிக்கள் தாய்மொழியில் பேசியது மகிழ்ச்சியான செய்தி- வெங்கையா நாயுடு

    மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தாய்மொழியில் பேசியது நாட்டுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையை நேற்று தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதற்கு முன்பு, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, உறுப்பினர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தொடரில் பல எம்.பி.க்கள் விவாதத்தின்போது தங்கள் தாய்மொழியிலேயே பேசினர். இது, நாட்டுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் மகிழ்ச்சியான செய்தி. மொழி பெயர்ப்பு முறை முன்னேறி இருப்பதால், மற்ற உறுப்பினர்களும் அதை புரிந்து கொள்ள முடிந்தது. சில நேரங்களில் மொழி புரியாமல் இருந்தால் கூட அவர்கள் நமது மொழியில் பேசியது திருப்தியாக இருந்தது.

    புதிய உறுப்பினர்கள் தங்கள் மாநில பிரச்சினைகளை நன்கு ஆய்வு செய்து, அதை சபையில் எழுப்பினார்கள். அவர்களின் நடத்தை, ஆய்வு ஆகியவற்றை பார்த்து வியந்தேன்.

    பத்திரிகையாளர்களை விட எம்.பி.க்கள் அதிக நேரம் சபையில் இருந்தனர். இரவு நேரத்தில் சபை நடக்கும்போது, பத்திரிகையாளர்களும் அமர்ந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×