என் மலர்

  செய்திகள்

  சுஷ்மா சுவராஜ்
  X
  சுஷ்மா சுவராஜ்

  இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ரூ.1 குறித்த சுஷ்மாவின் உரையாடல்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக போனில் உரையாடியது குறித்து வழக்கறிஞர் ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார்.
  புது டெல்லி:

  வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ் . இந்தியாவின்  15வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

  சுஷ்மா டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். மேலும் இவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

  சுஷ்மா மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  ஹரிஷ் சால்வே

  இந்நிலையில் சுஷ்மா இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு போனில் தன்னுடன் உரையாடியது குறித்து வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறுகையில், ‘நான் சுஷ்மா அவர்களிடம் நேற்றிரவு 8.50 மணிக்கு போன் மூலம் பேசினேன். இது மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒன்று.

  அப்போது அவர், எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என்றார். அதற்கு நான், கட்டாயம் அதை வாங்கிக் கொள்வேன் என்றேன். அவர் என்னை, நாளை (இன்று) மாலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது’ என உருக்கமாக கூறியுள்ளார்.  Next Story
  ×