search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம், டெல்லி
    X
    பாராளுமன்றம், டெல்லி

    பாராளுமன்ற மக்களவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

    ஜூலை மாதம் 27-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டது.

      இன்றைய விவாதத்தில் உரையாற்றிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
    இந்நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மீது இன்று காலையில் இருந்து மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இரவு 8 மணிக்குள் இந்த மசோதாக்கள் அனைத்தும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர், மக்களவையில் பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி, இந்த கூட்டத்தொடரில் 99 சதவீதம் அளவிலான அலுவல்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

    இதைதொடர்ந்து கூட்டத்தொடரை முடித்துக் கொள்ளலாம் என சபாநாயகரிடம் அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    Next Story
    ×