என் மலர்

  செய்திகள்

  ரோந்து பணியில் ராணுவம்
  X
  ரோந்து பணியில் ராணுவம்

  சுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் -இந்திய ராணுவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே, பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவுடன் இணைந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

  சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி

  மேலும், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை அணியை சேர்ந்த சில வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அவர்களுடன் சேர்த்து 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

  இந்நிலையில், வெள்ளைக் கொடியுடன் வந்து சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
  Next Story
  ×