search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள்
    X
    நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள்

    நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி

    நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கல்லூரி மாணவிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    நவிமும்பை நெருல் பகுதியில் எஸ்.ஐ.இ.எஸ். கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 9 மாணவ-மாணவிகள் நேற்று காலை கார்கர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

    இருப்பினும் மாணவ-மாணவிகள் காலை 11 மணியளவில் பான்டவ்காடா மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டு இருந்தனர்.

    இந்தநிலையில், மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவ-மாணவிகள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளையும் தேடினர். இதில் செம்பூர் நாக்கா பகுதியை சேர்ந்த ஸ்நேகா (வயது19) என்ற மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்வேதா, ஆர்த்தி, நேகா ஆகிய 3 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.

    கார்கருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள் பலியான சம்பவம் நெருல் கல்லூரி மாணவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×