search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி
    X
    கருணாநிதி

    பாராளுமன்றத்தில் கருணாநிதி சிலை - திமுக கோரிக்கை

    பாராளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என்று தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜாலியன் வாலாபாக் நினைவு அறக்கட்டளை அமைப்பில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. அந்த பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது இது மிக முக்கியமா?

    இதற்காகத்தான் கூட்டத்தொடரை நீடித்தீர்களா? பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

    முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகவே கூட்டத்தொடரை நீடிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பிரச்சினைக்கு உரிய மசோதாக்களை தாக்கல் செய்கிறது.

    அவை அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பெண்கள், குழந்தைகள், ஏழைகள், நலிவுற்ற சமூகத்தினருக்கு பாராளுமன்றம் என்ன நன்மை செய்யப் போகிறது? இதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    தூத்துக்குடியில் ஒரு இளம்பெண் உள்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கு உருப்படி யான ஒரு விசாரணை கூட இல்லை.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும். இதற்கு மத்திய அரசு உடனே முன்வரவேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு செந்தில்குமார் எம்.பி. பேசினார்.

    Next Story
    ×