என் மலர்

  செய்திகள்

  முன்னாள் மந்திரி டிகே சிவக்குமார்
  X
  முன்னாள் மந்திரி டிகே சிவக்குமார்

  எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை- முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சி தலைவர் அல்லது கட்சியின் மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
  பெங்களூரு:

  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மாநில அரசியலில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. நான் ஜோதிடர் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக நான் பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வேண்டுமோ அத்தனை பேரையும் எடுத்துக் கொள்ளட்டும்.

  இது கடைசி ஆட்டம் என்பதால் என்ன வேண்டுமோ அதை பா.ஜனதாவினர் செய்து கொள்ளட்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. முனிரத்னா என்னை சந்திக்கவில்லை. இதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும். எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது.

  எனக்கே உரிய பாணியில் அரசியல் செய்து வருகிறேன். அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன். முனிரத்னா ராஜினாமா செய்துவிட்டார். அவர் எந்த கட்சிக்கு செல்கிறார் என்பது எனக்கு தெரியாது. எதிர்க்கட்சி தலைவர் அல்லது கட்சியின் மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.

  கட்சியில் பதவிக்காக விண்ணப்பித்து கொண்டு சுற்றுவது எனது பழக்கம் இல்லை. தற்போதைக்கு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக சித்தராமையா உள்ளார். தினேஷ் குண்டூராவ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருகிறார். சட்டசபை இடைத்தேர்தலில் அவர்களின் வழிகாட்டுதல்படி நாங்கள் பணியாற்றுவோம். நான் எனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடிவு எடுத்துள்ளேன்.

  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
  Next Story
  ×