என் மலர்

  செய்திகள்

  பட்நாவிஸ்
  X
  பட்நாவிஸ்

  அனைத்து பிரச்சனைகளுக்கும் ஐந்து ஆண்டுகளில் தீர்வு காண இயலாது: மராட்டிய முதல்வர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்து ஆண்டுகளில் அனைத்து பிரச்சனைகளுக்கும் எந்தவொரு அரசாங்கத்தாலும் தீர்வு காண இயலாது என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
  மகாரடிஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் அமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘எந்தவொரு அரசாலும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது இயலாத காரியம்.

  ஆனால், முந்தைய அரசு 15 வருடங்களில் என்னென்ன செய்ததோ, அதைவிட இரண்டு மடங்கு நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளோம் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற முன்னேற்றம் குறித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு மேடையிலும் விவாதிக்கலாம்’’ என்றார்.

  மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. 2014-ல் சிவசேனாவும், பா.ஜனதாவும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், தற்போது இணைந்து போட்டியிட இருக்கின்றன.
  Next Story
  ×