என் மலர்

  செய்திகள்

  சீ பென்
  X
  சீ பென்

  இது தான் நாகபுஷ்பா, இது 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம் - நம்பலாமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகபுஷ்பா என்ற மலர் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும் என்ற தகவல் புகைப்படத்துடன் வைரலாகியுள்ளது.  நாகபுஷ்பா எனும் மலர் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இத்துடன் நாகபுஷ்பா மலர் என கூறும் புகைப்படம் ஒன்றும் பகிரப்படுகிறது. 

  வைரல் பதிவில், 'நாகபுஷ்பா 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இது மனாஸ் சரோவரில் பூத்தது.' என கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற பதிவு 2016 ஆம் ஆண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பல ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

  உண்மையில் இது நாகபுஷ்பா மலர் கிடையாது, இது கடலில் வாழும் முதுகெலும்பு இல்லா உயிரினம் ஆகும். இது சீ பென் என அழைக்கப்படுகிறது. இது அந்தோஸா பிரிவை சார்ந்தது ஆகும்.

  வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் இந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு ஜார்டன் பி போப்ரிக் என்பவர் எடுத்தது என தெரியவந்துள்ளது.

  நாகபுஷ்பா - வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

  இது பார்க்க இறகு பேனா போன்று காட்சியளிப்பதால் சீ பென் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை ஆர்க்டிக் பகுதி ஆழ்கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.

  இமய மலைப்பகுதியில் நாகபுஷ்பா மலர் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும் என்ற தகவலில் துளியும் உண்மை கிடையாது. மேலும் வைரல் புகைப்படத்தில் இருப்பது மலரே கிடையாது, அது கடல்வாழ் உயிரினம் ஆகும்.

  சமூக வலைத்தளங்களில் பரவும் அனைத்து தகவல்களையும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டாம். போலி தகவல்களை பரப்புவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் வரும் தகவல்களின் உண்மை தன்மை அறியாமல் அவற்றை பரப்ப வேண்டாம்.
  Next Story
  ×