search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவ வீரர்கள்
    X
    இந்திய ராணுவ வீரர்கள்

    காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: ஆளுநர் சத்ய பால் மாலிக்

    காஷ்மீரில் அமைதியான சூழ்நிலையே நிலவுவதாக அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
    காஷ்மீர்:

    இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்  நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

    இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

    இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுகளான 35 ஏ 370 ஆகியவற்றை நீக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதால்தான் ராணுவத்தை குவிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தனர்.

    சத்ய பால் மாலிக்

    இந்நிலையில், காஷ்மீரில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில ஆளுநரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதுகுறித்து மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியதாவது:-

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுகளை நீக்க மத்திய அரவு முடிவு செய்திருப்பதாகவும், அதனால்தான் கூடுதலாக ராணுவ வீரர்களை குவிப்பதாகவும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    மேலும், ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அமைதியான சூழ்நிலையே நிலவுகிறது. ஆகையால், பொது மக்கள் யாரும் இதை ராணுவ குவிப்பாக கருத்தில் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×