search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்பு
    X
    தீக்குளிப்பு

    கற்பழிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை - போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் ஆவேசம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண், போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் வைஷாலி நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அதேபகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    ஆனால் அவரது புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பெண் ஆவேசமடைந்தார். எனது புகாரை ஏன் விசாரிக்க மறுக்கிறீர்கள்? என கூறி அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார். திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு அலறித் துடித்தார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்த பெண்ணும், அவர் புகாரில் கூறிய நபரும் ஒத்த கருத்துடன் நெருங்கி பழகி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே புகாரில் கூறப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது கற்பழிப்பு புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை.

    இதனால் போலீசார் விசாரணையை தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே புகார் கூறப்பட்ட நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதையறிந்து தான் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். தனது புகாரின் பேரில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×